எல்ஐசி என்றாலே நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது இன்சூரன்ஸ். ஆனால் எல்ஐசி சிறந்த முதலீட்டாளரும் கூட.
இதற்கு சிறந்த உதாரணம் 2022ம் நிதியாண்டில் பங்கு சந்தையில் இருந்து மட்டும், 42,000 கோடி ரூபாய் லாபத்தினை புக் செய்துள்ளது.
இதே கடந்த 2020 – 2021ம் நிதியாண்டில் 36,000 கோடி ரூபாய் லாபத்தினை புக் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரூ.1.4 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. அசத்தும் ஐஐஐடி மாணவர்..!
மிகப்பெரிய அசெட் மேனேஜர்
இந்தியாவின் மிகப்பெரிய அசெட் மேனேஜரான எல்ஐசி, அதன் நிர்வாகத்தின் கீழ் 42 டிரில்லியன் ரூபாய் அசெட்டினை நிர்வாகம் செய்து வருகின்றது. இந்தியா பங்கு சந்தையில் முதலீடு செய்யும் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளராகும். இதன் மொத்த அசெட்களில் 25% முதலீட்டினை இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளது.
லாபம் சரிவு
2022ம் நிதியாண்டில் அதன் லாபம் 4043.12 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2900.57 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் எல்ஐசி மார்ச் மாதத்துடன் முடிவடைந்த கடைசி காலாண்டில், அதன் முழுமையான நிகர லாபம் 18% சரிவினைக் கண்டு, 2,372 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2893 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதி திரட்டல்
இதன் நிகர பிரீமியம் வருவாய் 1.44 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 4 அன்று 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டினை திரட்டிய இன்சூரன்ஸ் ஜாம்பவான், ஒரு பங்குக்கு 1.50 ரூபாய் டிவிடெண்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
க்ளைம் அதிகரிப்பு
2022ம் நிதியாண்டில் கொரோனா பரவல் காரணமாக இன்சூரன்ஸ் க்ளைம் என்பது மிகப்பெரியளவில் அதிகரித்துள்ளது. எனினும் இந்த நிதியாண்டில் அந்தளவுக்கு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல கொரோனா தாக்கமும் கடந்த ஆண்டில் இருந்ததை போல இந்த ஆண்டிலும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
LIC books profits of Rs.42,000 crore from share market
LIC has booked a profit of Rs 42,000 crore from the stock market in FY2022 alone.