பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில், ஒவ்வொரு மாத துவக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி வரும் நிலையில், ஜூன் மாதம் மக்கள் மத்தியில் சிலிண்டர் விலை மாற்றம் குறித்து அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த நிலையில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் மத்திய அரசு நிறுவனங்கள் குறிப்பாக உணவகங்களுக்குச் சுமையைக் குறைக்கும் வகையில் வர்த்தகச் சிலிண்டருக்கான விலையைக் குறைத்தது.
இந்த விலை குறைப்புக்கு மத்திய அரசு மட்டும் அல்லாமல் சர்வதேச சந்தை விலையில் ஏற்பட்ட மாற்றமும் முக்கியக் காரணமாக உள்ளது.
என்ன இப்படியாகி போச்சு.. 7வது இடத்திற்கு தள்ளப்பட்ட எல்ஐசி.. என்ன காரணம்?
எல்பிஜி சிலிண்டர் விலை
ஜூன் 1ஆம் தேதி மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் பிடி 19 கிலோ எடையுள்ள வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களின் விலை புதன்கிழமை முதல் ரூ.135 குறைக்கப்படுகிறது என அறிவித்துள்ளது.
பெரும் ஏமாற்றம்
வர்த்தக எல்பிஜி சிலிண்டர்களுக்கு மட்டுமே விலை குறைப்பை அறிவித்துள்ள நிலையில் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலையில் எவ்விதமான மாற்றமும் அறிவிக்காதது பெரும் ஏமாற்றமாக உள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள சிலிண்டர் விலை குறைப்பு மூலம் உணவகங்களில் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
விலை குறைப்பு
இன்றைய விலை குறைப்பின் மூலம் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தகச் சிலிண்டர் விலை 2,219 ரூபாய். இதைத் தொடர்ந்து கொல்கத்தாவில் ரூ.2,322 ஆகவும், மும்பையில் ரூ.2,171.50 ஆகவும், சென்னையில் ரூ.2,373 ஆகவும் உள்ளது.
இறக்குமதி சம விலை
இந்தியாவில் எல்பிஜி விலையை இறக்குமதி சம விலை (IPP – import parity price) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு நாடு இறக்குமதி செய்யும் எல்பிஜி விலையை அடிப்படையாகக் கொண்டது ஐபிபி அளவீடுகள் தீர்மானிக்கப்படும்.
சவுதி அரேபியா
இப்படி இந்தியா அதிகளவில் எரிவாயுவை சவுதி அரேபியாவிடம் இருந்து தான் வாங்குகிறது. இதன் மூலம் சவுதி அராம்கோவின் LPG விலை, FOB விலை, கடல் சரக்கு போக்குவரத்துச் செலவுகள், காப்பீடு தொகை, சுங்க வரி, துறைமுகச் செலவுகள் ஆகியவற்றைச் சேர்த்து ஐபிபி விலை தீர்மானிக்கப்படும்.
ஜிஎஸ்டி, கலால் வரி, சரக்குக் கட்டணம்
இந்த ஐபிபி விலை பொதுவாகவே டாலரில் தான் இருக்கும், இதை இந்திய ரூபாய்க்கு மாற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை விலையை ஒரு மாதத்தின் துவக்கத்தில் தீர்மானிக்கும். விற்பனைக்கு வரும் போது ஜிஎஸ்டி, கலால் வரி, சரக்குக் கட்டணம் ஆகியவற்றைச் சேர்த்து விலை மாறுபடுகிறது.
வரி விதிப்பு
இதன் அடிப்படையில் தான் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டருக்கான விலை ரீசெட் செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற மாநில வாரியான வரிகளைப் பொறுத்து எல்பிஜி சிலிண்டர் விலைகள் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாறுபடும்.
சவுதி ஆராம்கோ விலை
இந்த நிலையில் இந்தியாவில் சிலிண்டர் விலையைத் தீர்மானிக்கும் ஆர்கஸ் ப்ரொபைன் சவுதி ஆராம்கோ-வின் ஜூன் 2022க்கான விலை 5.83 சதவீதம் குறைந்து 729.27 டாலராக உள்ளது. முன்பு 774.400 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை தானே எல்லாம்..
இந்த விலை குறைப்பு தான் தற்போது இந்தியாவில் எதிரொலித்துள்ளது. மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் லாபத்தையும், வருமானத்தையும் குறைக்கத் தயாராக இருந்தால் அடுத்தச் சில நாட்களில் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலையும் குறைய வாய்ப்பு உள்ளது.
Commercial LPG cylinder prices cut by Rs135 on june 1; How LPG cylinder Price is Calculated in India
Commercial LPG cylinder prices cut by Rs135 on june 1; How LPG cylinder Price is Calculated in India சிலிண்டர் விலை 135 குறைப்பு.. எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா..?! #Saudi