சென்னை: ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது என 19துறை செயலாளர் களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இன்று (1-6-2022) தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை 10-ஆவது தளத்தில் நடைபெற்ற துறைச் செயலாளர்களுடனான முதல் நாள் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் இறுதியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ஏழை, எளிய மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களில் எவ்வித தொய்வும், தாமதமும் இருக்கக்கூடாது அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தினார். மக்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்களின் பயன்களை கொண்டு போய்ச்சேர்க்க வேண்டும். அனைத்துத் துறைகளும் திட்டங்களை நிறைவேற்றும்போது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயல்படுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இன்றைய ஆலோசனை கூட்டத்தில், நிதி, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, பொதுத்துறை எரிசக்தி நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் வீட்டு வசதி, மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொழில்துறை, சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பவியல் தமிழ் வளர்ச்சித் துறை, சுற்றுலாத்துறை, மனிதவள மேம்பாடு வணிகவரித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட 19 துறைகள் சார்ந்த அமைச்சர்கள் மற்றும் செயலர்கள் கலந்துகொண்டனர்.
#tdi_1 .td-doubleSlider-2 .td-item1 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/06/Sec-meet-speech-stalin01-06-01.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item2 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/06/Sec-meet-speech-stalin01-06-02.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item3 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/06/Sec-meet-speech-stalin01-06-03.jpg) 0 0 no-repeat;
}
#tdi_1 .td-doubleSlider-2 .td-item4 {
background: url(https://www.tamilfox.com/wp-content/uploads/2022/06/Sec-meet-speech-stalin01-06-04.jpg) 0 0 no-repeat;
}