மத்திய அரசு கிரிப்டோ மசோதா குறித்த ஆலோசனை அறிக்கையைத் தயார் செய்து ரெடியாக வைத்திருக்கும் இந்நிலையில் நிதியமைச்சகம் எப்போது வேண்டுமானாலும் நடைமுறைப்படுத்தும் நிலை உள்ளது.
இந்த நிலையில் கிரிப்டோ முதலீடுகள் குறிப்பாகப் பிட்காயின் மீதான முதலீடு செய்வது சரிதானா எனக் கேள்வி எழுப்பும் அளவிற்கு முக்கியமான ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
உணவு, பிட்காயின், தங்கம் வாங்கி வைங்க.. ஏன்..? ராபர்ட் கியோசாகி சொல்லும் காரணத்தை பாருங்க!
பிட்காயின்
பிட்காயின் குறித்து ஒரு கூட்டம் எந்த அளவிற்கு ஆதரவாகப் பேசினாலும் மறுப்புறம் ஆதிக்கம் நிறைந்த மிகப்பெரிய கூட்டம் கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் பிட்காயின் மைனிங் அதாவது பிட்காயின் உற்பத்தி செய்யும் தளம் திறனற்றதாகவும், அதிகப்படியான மின்சாரத்தைச் சாப்பிடும் ஒன்றாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மின்சாரம்
பிட்காயின் உற்பத்தில் மிகப்பெரிய செலவே மின்சாரம் தான், இந்த மின்சாரத்தை நிலக்கரி மற்றும் எரிபொருள் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டுச் சுற்றுசூழலை பாதித்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் கிரிப்டோ உற்பத்தி மூலம் கிடைக்கும் ஒவ்வொரு 4 டாலர் வருமானத்தில் 3 டாலரை மின்சாரத்திற்கு மட்டுமே செலவிடப்படுவதாகக் கிரிப்டோமண்டே தெரிவித்துள்ளது.
380 நாட்களுக்கான மின்சாரம்
ஒரு பிட்காயினை உற்பத்தி செய்யச் சுமார் 2,165 கிலோவாட் மின்சாரம் செலவாகிறது. இதேவேளையில் இந்தியாவில் சராசரியாக ஒரு வீட்டில் தினும் 5.7 கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது, இப்படியானால் 380 நாட்களுக்கு இந்திய வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம் மூலம் ஒரு பிட்காயின் உருவாக்கப்படுகிறது.
ஒரு இந்திய குடும்பம்
இப்போ சொல்லுங்க ஒரு நிலையற்ற மதிப்பை கொண்டு இருக்கும் பிட்காயினை ஒரு உருவாக்க ஒரு இந்திய குடும்பம் வருடம் முழுவதும் பயன்படுத்தும் மின்சாரத்தைச் செலவு செய்ய வேண்டுமா..? இதை வெறும் மின்சாரமாக மட்டும் அல்லாமல் இந்த மின்சாரம் மூலம் அக்குடும்பத்தின் வளர்ச்சியைப் பார்த்தால் கட்டாயம் எது முக்கியம் எனக் கூற முடியும்.
கிரிப்டோகரன்சி
இன்றைய வர்த்தகச் சந்தையில் முன்னணி கிரிப்டோகரன்சி விலை
பிட்காயின் – 31,422.43 டாலர்
எதிரியம் – 1,928.93 டாலர்
டெதர் – 0.9993 டாலர்
USD காயின் – 0.9999 டாலர்
பினான்ஸ் – 315.26 டாலர்
கார்டானோ – 0.5849 டாலர்
ரிப்பிள் – 0.4161 டாலர்
பினான்ஸ் USD – 0.9991 டாலர்
சோலானோ – 44.51 டாலர்
டோஜ்காயின் – 0.0862 டாலர்
போல்காடாட் – 10.50 டாலர்
வார்ப்டு பிட்காயின் – 31,770.82 டாலர்
ட்ரான் – 0.0899 டாலர்
அவலான்சி – 26.69 டாலர்
டாய் – 1.0000 டாலர்
ஷிபா இனு – 0.0000 டாலர்
பாலிகான் – 0.6523 டாலர்
க்ரானோஸ் – 0.1913 டாலர்
லைட் காயின் – 68.47 டாலர்
UNUS Sed – 4.9800 டாலர்
380 days Indian household electricity Needs To Mine A Single Bitcoin
380 days Indian household electricity Needs To Mine A Single Bitcoin ஒரு வருட கரன்ட் பில்-லும் ஒரு பிட்காயின்-ம் சம்ம.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..!