அமெரிக்காவில் 30 வயதான பெண் ஒருவர் கர்ப்பமாக இருக்கும்போது மீண்டும் கர்ப்பமாகிய அதிசய சம்பவம் நடந்துள்ளது.
அவர் இரண்டு குழந்தையைகளையும் இரட்டையராக பிரசவித்துள்ளார்.
அற்புதங்கள் நடக்காது என்று யார் சொன்னது. இப்படி ஒரு அற்புதத்தை இதற்குமுன்பு நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகம்தான்.
காரா வின்ஹோல்ட் என்ற 30 வயதாகும் பெண் ஏற்கனவே மூன்று முறை கருச்சிதைவுகளைச் சந்தித்த பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமானார். பின்னர் ஒரு மாதம் கழித்து, அவர் மீண்டும் கருவுற்றார்.
இந்த தனித்துவமான மருத்துவ நிலை சூப்பர்ஃபெடேஷன் (superfetation) என்று அழைக்கப்படுகிறது.
500 பில்லியன் டொலர் மதிப்பில் உலகை வாய் பிளக்கவைக்கும் திட்டத்தில் சவுதி அரேபியா!
சூப்பர்ஃபெடேஷன் என்றால் என்ன?
ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் காலத்தில் மீண்டும் கர்ப்பம் ஏற்பட்டால், அது சூப்பர்ஃபெடேஷன் என்று அழைக்கப்படுகிறது. ஹெல்த்லைன் படி, முதல் நாளுக்கு சில நாட்கள் அல்லது வாரங்களில் இது நிகழலாம்.
இறுதியாக, காரா வின்ஹோல்டுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன, அவை ஆறு நிமிட இடைவெளியில் பிறந்தன.
காரா வின்ஹோல்ட், தனக்கு நடந்தது ஒரு அதிசயம் என்று 100 சதவீதம் நம்புவதாக கூறியுள்ளார்.
வின்ஹோல்ட் மற்றும் அவரது கணவருக்கு 2018-ல் முதல் மகன் பிறந்தார். தம்பதியினர் குடும்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்தபோது, அவருக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டது.
மீண்டும் கருவுற்றால் மீண்டும் சிதைந்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு நிலைமை இருந்தது.
ஆனால், தைரியமாக மீண்டும் குழந்தையை பெற்றெடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்தபோது அவருக்கு இப்போது இரட்டை குழந்தைகள் மூலம் இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்ததுள்ளது.