ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறும்போது, “குல்காம் மாவட்டம் கோபால்போரா பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளிக்குள் நுழைந்த தீவிரவாதிகள் சிலர் அங்கிருந்த ஒரு ஆசிரியையை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீவிரவாதிகளை தேடி வருகிறோம்” என்றார். இத்துடன் மே மாதத்தில் மட்டும் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, 3 போலீஸார் மற்றும் காஷ்மீர் பண்டிட் அரசு ஊழியர் உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டனர்.
2 தீவிரவாதிகள் உயிரிழப்பு: இதனிடையே, புல்வாமா மாவட்டம் ராஜ்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.