மூணாறு : கேரளாவில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படவுள்ளது,” என, அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 15, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 20 ல் வெளியிடப்படும் என முன் அறிவிக்கப்பட்டிருந்தது. அவற்றின் முடிவுகளை முன் கூட்டியே வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூன் 12 ல் வெளியிடப்பட உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மாநிலத்தில் நுழைவு விழாவுடன் பள்ளிகள் நாளை (இன்று) திறக்கப்படுகிறது. 12,986 பள்ளிகளில் நுழைவு விழா நடக்கிறது. ஒன்றாம் வகுப்பில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தர வாய்ப்புள்ளது. பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். பள்ளிகளின் முன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அருகில் உள்ள கடைகளில் ஆய்வு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
Advertisement