சென்னையைச் சேர்ந்த நாராயணசாமி சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார்.
இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் (பிசிசிஐ) தலைவராகவும் பணியாற்றினார்.
ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் சீனிவாசன் உள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் இவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ்.நாராயணசாமி. சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட், ராசி சிமெண்ட் என்ற வர்த்தகப் பெயர்களில் இந்நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை ஆகிறது.
இந்த இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகப் பொறுப்பாற்றுகிறார்
சீனிவாசன் அமெரிக்காவிலுள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியில், வேதிப்பொருள் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்.
விவாகரத்துக்கு பின் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற தம்பதி விமான விபத்தில் உயிரிழப்பு! புகைப்படம்
முன்னாள் பிசிசிஐ தலைவர் ஏ.சி.முத்தையாவால் கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சீனிவாசன் அறிமுகமானார்.
பின்னாளில் கிரிக்கெட் உலகில் பல்வேறு பதவிகள் மூலம் உச்சம் தொட்டார்.
சீனிவாசனின் சொத்து மதிப்பு $100 மில்லியன் ஆகும்.
அந்த அளவுக்கு கடின உழைப்பின் மூலம் தனது தொழில்களில் உச்சம் தொட்டார் சீனிவாசன்.
அவர் இந்தியாவின் பணக்கார கிளப் உரிமையாளர்களில் ஒருவர்.
அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் வலது கை போல அவருடன் நட்பாக இருப்பவர் சீனிவாசன்.
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கூறி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பின்னர் அந்த அணி தடைக்கு பின்னர் மீண்டு வந்த போதும் ஸ்ரீனிவாசனால் தான் தோனி, அணியின் கேப்டனாகவே நீடித்தார்.
இப்படி பல சர்ச்சைகளில் அவ்வபோது அவர் சிக்குவார்.
மேட்ச் பிக்ஸிங், கரப்ஷன் என எவ்வளவு கூச்சலிட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியை சந்தித்தாலும் சீனிவாசன் என்னும் சாணக்கியனின் வெற்றிநடை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.