Kovai TN HRCE invites application for various jobs: தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் அருமையான வேலைவாய்ப்பு வெளிவந்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 28.06.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவை அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள எழுத்தர், காவலர், தூய்மைப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வழக்கு எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : ரூ.18,500 – 58,600
சீட்டு விற்பனை எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : ரூ.18,500 – 58,600
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் : ரூ.15,900 – 50,400
துப்புரவு பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை – 3
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் : ரூ.10,000 – 31,500
கால்நடை பராமரிப்பு
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் : ரூ.10,000 – 31,500
காவலர் (தொகுப்பூதியம்)
காலியிடங்களின் எண்ணிக்கை – 3
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
சம்பளம் : ரூ.6,000
திருமஞ்சனம்
காலியிடங்களின் எண்ணிக்கை – 2
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். வேதபாட சாலையில் ஓராண்டு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.15,900 – 50,400
உதவி யானைப்பாகன்
காலியிடங்களின் எண்ணிக்கை – 1
கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். யானை வளர்க்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.11,600 – 36,800
வயதுத் தகுதி : 01.07.2021 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதையும் படியுங்கள்: TNSDC Jobs; தமிழக அரசு வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுய விவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.06.2022
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பை பார்வையிடவும்.