சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம்.. சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.!

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியை சசிகலா மேற்கொண்டுவரும் நிலையில், அவரை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை இருக்கிறது என்றும் அதிமுகவை ஒன்றிணைப்பது தொண்டர்கள் கையில்தான் இருக்கிறது என்ன சமீபத்தில் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் தான் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது என்று சசிகலா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சசிகலா அவர்கள் பாஜகவில் இணைந்தார் நிச்சயம் வரவேற்போம் என்று பாஜகவை சேர்ந்த தமிழக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து நயினார் நாகேந்திரன் புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசுகையில், “சசிகலாவை சேர்த்து கொண்டால் அதிமுக இன்னும் வலுவாக இருக்கும். மாறாக, அவர் பாஜகவிற்கு வந்தால் அவரை நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.