சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; டிரைவர் போக்சோவில் கைது| Dinamalar

காரைக்கால் : காரைக்காலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவர் ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டார்.காரைக்கால் கோட்டுச்சேரி மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் கன்சிராம்,27. இவர் மீன் சரக்கு லாரி ஓட்டி வருகிறார்.நேற்று முன்தினம், அப்பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் அத்துமீறி, கன்சிராம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கன்சிராமை பிடித்து கோட்டுச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கன்சிராமை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.