சேலம் மாவட்டத்தில் மகனின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக சிறிய கேடிஎம் பைக்கை உருவாக்கியுள்ளார் தந்தை.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மெக்கானிக் தங்கராஜ். இவரது மகன் மோகித். ஒருநாள் சாலையில் சென்று கொண்டிருந்த விலை உயர்ந்த கேடிஎம் பைக்கை பார்த்த மோகித் அதேபோன்ற வாகனம் வேண்டும் என தந்தையிடம் கேட்டு அடம்பிடித்துள்ளான்.
இதையடுத்து மகனின் ஆசையை பூர்த்தி செய்வதற்காக ஒரு வருடமாக வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த தங்கராஜ், 70 ஆயிரம் ரூபாய் செலவில் சிறிய ரக கே.டி.எம் பைக்கை உருவாக்கி மகனுக்கு பரிசளித்துள்ளார். மகிழ்ச்சி அடைந்த மோகித், தந்தையை பின்னால் அமர வைத்து பைக்கை ஓட்டி மகிழ்ச்சி அடைந்தார்.
மேலும் மோகித் பைக்கை வீட்டின் காம்பவுண்ட் உள்ளே மட்டுமே ஓட்ட அனுமதித்ததாகவும், வெளியே செல்ல அனுமதிப்பதில்லை என்றும் தந்தை தங்கராஜ் தெரிவித்துள்ளார்.