தங்கம் விலை எங்கு குறைவு.. சென்னை, கோவையில் என்ன நிலவரம்?

இந்தியா உலக அளவில் சீனாவிற்கு அடுத்து தங்கத்தினை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இரண்டாவது இடம் வகிக்கும் நாடாகும்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் பெரும்பகுதி தங்க ஆபரணத்திற்காக இறக்குமதி செய்யப்படுகின்றது.

தரவின் படி, ஜெம்ஸ் & ஜூவல்லரி-யின் ஏற்றுமதியானது 2021 – 22ம் ஆண்டில் 50% அதிகரித்து, 39 பில்லியன் டாலராக ஏற்றம் கண்டுள்ளது.

கிட்டத்தட்ட 2 வார சரிவில் தங்கம் விலை.. சென்னையில் என்ன நிலவரம்..?

தங்கம் இறக்குமதி

தங்கம் இறக்குமதி

2020 – 21ம் நிதியாண்டில் இந்தியாவில் இறக்குமதி 34.62 பில்லியன் டாலராக இருந்தது. 2021 – 22ம் நிதியாண்டில் மட்டும் மஞ்சள் உலோகத்தின் இறக்குமதியானது 842.28 டன்னாக அதிகரித்துள்ளது.

2023ம் நிதியாண்டில் தங்கத்தின் தேவையானது 11% வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2020ம் நிதியாண்டை விட மஞ்சள் உலோகத்தின் தேவை 40% அதிகரித்துள்ளது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

இந்தியாவில் திருமணங்கள் மற்றும் திருவிழா காலங்கள் ஆகியவை தங்கத்தின் தேவையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நகைகளின் தேவை அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டில் பல்வேறு விரிவாக்கத் திட்டங்களை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
 

ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்

தங்கம் விலையானது கிட்டதட்ட 2 வார சரிவில் காணப்படுகிறது. தொடர்ந்து டாலரின் மதிப்பு ஏற்றம் கண்டு வரும் நிலையில், பத்திர சந்தையும் ஏற்றம் கண்டு வருகின்றது. இதன் காரணமாக தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகிறது. இது மற்ற கரன்சிதாரர்களுக்கு தங்கம் விலையை விலையுயர்ந்ததாக மாற்றும். இதற்கிடையில் பணவீக்கமும் உச்சத்தினை எட்டி வருகின்றது. இதன் மத்தியில் தங்கம் விலை ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்.

இந்தியாவில் எதெல்லாம் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

இந்தியாவில் எதெல்லாம் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்

தங்கத்தின் தேவை, விழாக்கால தேவை, திருமண பருவம், வரிகள், பணவீக்கம், வட்டி விகிதம், அரசு கொள்கைகள், சர்வதேச காரணிகள் உள்ளிட்ட பல காரணிகளும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். குறிப்பாக தேவையானது தங்கம் விலையில் நேரடியாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது தேவை சரிவினைக் கண்டால் விலை குறையலாம். தேவை அதிகரித்தால் விலையும் அதிகரிக்கலாம்.

என்னென்ன வழிகள் உண்டு?

என்னென்ன வழிகள் உண்டு?

தங்கத்தில் முதலீடு செய்ய பல்வேறு வழிகள் உண்டு. தங்க ஆபரணம், கோல்டு இடிஎஃப், டிஜிட்டல் தங்கம், தங்க மியூச்சுவல் ஃபண்டுகள் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

யாரெல்லாம் இறக்குமதி?

யாரெல்லாம் இறக்குமதி?

தங்கத்தினை பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தினை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகின்றது.

 எங்கு குறைவு?

எங்கு குறைவு?

22 கேரட் தங்கம் (10 கிராம்)

கோயம்புத்தூர் – ரூ.47,400

சென்னை – ரூ.47,400

கேரளா – ரூ.47,500

கொல்கத்தா – ரூ.47,500

ஹைத்ராபாத் – ரூ.47,500

மும்பை – ரூ.47,500

டெல்லி – ரூ.47,500

வதோதரா – ரூ.47,550

அகமதாபாத் – ரூ.47,560

ஜெய்ப்பூர் – ரூ.47,650

லக்னோ – ரூ.47,650

24 கேரட் தங்கம் (10 கிராம்)

24 கேரட் தங்கம் (10 கிராம்)

கோயம்புத்தூர் – ரூ.51,710

சென்னை – ரூ.51,710

கேரளா – ரூ.51,820

கொல்கத்தா – ரூ.51,820

ஹைத்ராபாத் – ரூ.51,820

மும்பை – ரூ.51,820

டெல்லி – ரூ.51,820

வதோதரா – ரூ.51,870

அகமதாபாத் – ரூ.51,880

ஜெய்ப்பூர் – ரூ.51,970

லக்னோ – ரூ.51,970

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Gold prices are the cheapest in these Indian cities: What is the situation in Chennai and Coimbatore?

Where is the lowest gold price in India: what is the situation in Chennai and Coimbatore?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.