தமிழில் வெளிவரும் 'தோர்: லவ் அண்ட் தண்டர்'
மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சூப்பர் ஹீரோக்களில் ஒருவர் தோர். அவன்ஞ்சர் எண்ட் கேம் படத்தில் எல்லா சூப்பர் ஹீரோக்களுடன் தோரும் இடம் பெற்றிருந்தார். தற்போது தோர் கேரக்டரை மட்டுமே மையமாக வைத்து உருவாகி உள்ள படம் படம் தோர் : லவ் அண்ட் தண்டர்.
ஆஸ்கர் விருது பெற்ற தைகா வெயிட்டிடி இந்த படத்தை இயக்கி உள்ளார். வழக்கம்போல் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், தோர் ஆக நடித்திருக்கிறார். அவருடன் டெஸ்ஸா தாம்சன், நடாலி போர்ட்மேன் ஆகியோருடன் கிறிஸ்டியன் பேல், இப்படம் மூலம் மார்வலில் படத்தில் அறிமுகமாகிறார்.
படம் வருகிற ஜூலை 8ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டு காமெடிக்கும், விஷூவல் எபெக்டுக்கும் முக்கியத்தும் கொடுத்து பேண்டசி படமாக உருவாகி உள்ளது.