திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதித்திருந்த தடை இரண்டு நாட்களுக்கு பிறகு இன்று நீக்கப்பட்டது. இதனால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள பிரதான சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியைய் தாண்டியதால் அணையில் இருந்து 1000 கன அடி உபரிநீர் நேற்று முன்தினம் முதல் வெளியேற்றம் செய்யப்பட்டது. இதன்காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி திற்பரப்பு பேரூராட்சி நிர்வாகம் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் முதல் தடை விதித்தது.
image
இதனால் அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதுபோல் மாவட்டத்தில் மற்ற சுற்றுலாத் தலங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வராமலும் தவிர்த்தனர். இந்த நிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்க்கு பருவமழை சற்று குறைந்து பெய்து வருவதாலும், பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதையார் பட்டணம் கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீரை வெளியேற்றம் செய்ய துவங்கியதாலும், அணையில் இருந்து திறந்து வெளியேற்றம் செய்துவந்த உபரிநீரை முழுமையாக நிறுத்தி வைத்தது.
image
இதன்காரணமாக அருவியில் வந்துகொண்டிருந்த தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் இன்று முதல் அருவியில் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதனால் இங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இங்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.