பத்ம விருதுக்கு பரிந்துரை : மத்திய அரசு அறிவிப்பு| Dinamalar

புதுடில்லி :’பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்யலாம்’ என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு: அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, சேவை உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன.

வரும், 2023-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் தயாரிக்கும் பூர்வாங்க பணிகள் துவங்கியுள்ளன. பத்ம விருது பெற தகுதி உடையவர்களை பொதுமக்களும் பரிந்துரை செய்யலாம். பரிந்துரை செய்ய விரும்புவோர் www.awards.gov.in என்ற இணையதளத்தில் விருது பெற தகுதி உடையவர் விபரங்களை, செப்.,15-க்குள் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.