பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிரான பணமோசடி வழக்கு, லக்னெள சிறப்பு நீதிமன்றத்தில நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், இந்த அமைப்பின் 23 வங்கி கணக்குகள் முடக்கப்படுவதாக அமலாக்கத் துறை இன்று அதிரடியாக தெரிவித்துள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள இந்த வங்கிக் கணக்குகளின் மொத்த மதிப்பு 68.62 லட்சம் ரூபாய் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ரிஹாப் இந்தியா அமைப்பின் 10 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மிகவும் ஆபத்தான இயக்கம் என்றும், மனித உரிமைகள் அமைப்பு போல செயல்பட்டு ஆஃப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளுக்கு சண்டையிட ஆட்களை இந்த அமைப்பு அனுப்பி வருவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் அந்த அமைப்பின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.