புதுடில்லி : மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு, கடந்த நிதியாண்டில் தனி நபர்கள், பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றின் வாயிலாக, 477 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையம், 2021 – 22ம் நிதியாண்டில் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பா.ஜ., 477 கோடியே 54 லட்சத்து 50 ஆயிரத்து எழுபத்து ஏழு ரூபாய் நன்கொடை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. தனி நபர்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை வாயிலாக இந்த நன்கொடை பெறப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் காங்., 74 கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 731 ரூபாய் நன்கொடை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய சட்டப்படி, அரசியல் கட்சிகள், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பெறும் நன்கொடை விபரங்களை ஆண்டுதோறும் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டும்.
புதுடில்லி : மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு, கடந்த நிதியாண்டில் தனி நபர்கள், பல்வேறு நிறுவனங்கள் ஆகியவற்றின் வாயிலாக, 477 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையம், 2021 –
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.