கொல்கத்தா: பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கொல்கத்தாவில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழில் கில்லி, அந்நியன், காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி உட்பட ஏராளமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.பின்னணி பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
