பிரேசிலில் டிரக் விபத்தில் இருந்து இளைஞர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மரகானா நகரில் சென்ற டிரக்கின் பின் பகுதி மரத்தில் தட்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடத் தொடங்கியது.
சாலையோரம் நின்ற இளைஞர் மீது டிரக் மோத இருந்த நிலையில், அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் விலகி உயிர் தப்பினார். இணையத்தில் தற்போது வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.