மக்கள் தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், மத்திய அரசின் சில திட்டங்களை செயல்படுத்துவதில் இலக்குகளை அடைய மாநில அரசு தவறி விட்டது என்றார்.
நல்ல நிர்வாகம், சேவை மற்றும் ஏழைகளின் நலன் ஆகியவையே மத்திய அரசின் அடிப்படை தாரக மந்திரங்கள் ஆகும் என்றும் கூறினார்.