புதுச்சேரியில், குடி போதையில் சாலையில் புரண்டு சண்டையிட்ட இரண்டு கோஷ்டிகளை போலீசார் தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர்.
வள்ளலார் சாலையில் உள்ள மதுபானக்கடையில் மது அருந்திய இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் அவர்கள் சாலைக்கு வந்து ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொள்ளத் தொடங்கினர்.
அங்கு விரைந்த போலீசார் தடியடி நடத்தி அவர்களை கைது செய்தனர்.
பீர் பாட்டிலால் தலையில் தாக்கப்பட்டு சாலையில் மயங்கி கிடந்த நபரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.