மனைவியை தவறாக பேசிய தட்டிக்கேட்ட கணவன் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மதுராந்தகம் தண்டு பகுதியை சேர்ந்தவர் மோகன்.. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்டு தனியே வசித்து வருகிறார். இந்நிலையில் மோகனின் சகோதர் அவரை காண அவரது வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது இரத்த வெள்ளத்தில் மோகன் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது உறவினர்களான பிரபு மற்றும் ஜெயக்குமார் சில நண்பர்களுடன் வந்து மது அருந்தியுள்ளனர்.
அப்பொழுது பிரபும் ஜெயக்குமாரும் மோகனின் மனைவியை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மோகனுக்கும் அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் மது பாட்டில்கள் சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றனர். இந்நிலையில் பிரபு மற்றும் ஜெயக்குமாரை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.