மாற்றுதிறனாளி பெண்ணை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் அருகே இருந்த மாற்று திறனாளி பெண்ணை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் மணிகண்டனை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மணிகண்டன் மீது போக்சோ வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.