மீண்டும் தீவிரமடையும் ரஷ்ய – உக்ரைன் போர்க்களம்! அமெரிக்காவின் முடிவு தொடர்பில் பைடன் அறிவிப்பு


உக்ரைன் – ரஷ்யாவுக்கிடையிலான மோதல் நிலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றது. கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி ஆரம்பமான இந்த போர் இதுவரையில் எவ்வித முடிவும் இன்றி தொடர்ந்து வருகின்றது. 

இந்த நிலையில், உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகளின் கோர தாக்குதல்

தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்பகுதிகளை முழுமையாக கைப்பற்ற முயற்சித்து வருகின்றன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மீண்டும் தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்க்களம்! அமெரிக்காவின் முடிவு தொடர்பில் பைடன் அறிவிப்பு

உக்ரைனுக்கு குவியும் உதவிகள்

மேலும் உக்ரைனுக்கு ஆயுத உதவி, நிதியுதவிகளை அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து செய்து வருகின்றன.

இதன் மூலம் ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் கடும் சவால் அளித்து வருகிறது.

இதனால் தலைநகர் கிவ், கார்கிவ் ஆகிய நகரங்களை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை.

மீண்டும் தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்க்களம்! அமெரிக்காவின் முடிவு தொடர்பில் பைடன் அறிவிப்பு

இதற்கிடையே உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க கூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீன ரொக்கெட் அமைப்புகள் அனுப்பப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜோ பைடன் கூறிய விடயம்

“உக்ரைனுக்கு இன்னும் மேம்பட்ட ரொக்கெட் அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளேன். இது போர்க்களத்தில் முக்கிய இலக்குகளை இன்னும் துல்லியமாக தாக்க உதவும் என்றார்”.

மீண்டும் தீவிரமடையும் ரஷ்ய - உக்ரைன் போர்க்களம்! அமெரிக்காவின் முடிவு தொடர்பில் பைடன் அறிவிப்பு

அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது,

“அதிநவீன ஏவுகணை அமைப்புகள் உக்ரைனில் ரஷ்யாவின் முன்னேற்றங்களை தடுக்க பயன்படுத்தப்படும்.

அவை ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்தப்படாது.

ரஷ்யாவுக்குள் தாக்க ஏவுகணைகளை பயன்படுத்த மாட்டோம் என்று உக்ரைன் உறுதி அளித்தையடுத்து 80 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக் கூடிய அதிநவீன பீரங்கி ரொக்கெட் அமைப்புகளை உக்ரைனுக்கு அமெரிக்க வழங்குகிறது.

இதில் வெடிமருந்துகள், விமான கண்காணிப்பு ரேடார்கள், கவச எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளிட்டவைகளும் அடங்கும்” என்றனர். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.