முதலமைச்சர் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குற்றமற்றவர் என பேசி வரும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி அமைச்சருக்கு சொந்தமாக பல நிறுவனங்கள் உள்ளதாகவும், 16 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் பல மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், மோசடி செய்த துரோகிக்கு உதவி செய்கிறீர்களா என டெல்லி முதலமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.