முதலாளி பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் நவனீதன் என்பவருக்கு சொந்தமான துணிகடையில் அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் 11 ஆண்டுகளாகவேலை செய்து வந்தார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கு பல முறை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவ செலவிற்கு பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது நவனீதனின் மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால்கூறி விரட்டியுள்ளனர். இந்நிலையில், அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சித்துள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கதினர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.