கொரோனா தொற்று காரணத்தால் இந்தியாவின் முன்னணி கல்லூரிகளில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்யமுடியாமல் தவித்து வந்த வெளிநாட்டு நிறுவனங்கள் தற்போது தங்க வேட்டையாக இந்திய மாணவர்களை வியப்பு அளிக்கும் சம்பளத்தில் பணியில் அமர்த்தி வருகிறது.
இந்நிலையில் ஐஐஐடி அலகாபாத் கல்லூரி மாணவர் ஒருவருக்குக் கூகுள் நிறுவனம் அதிரடியாக 1.4 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளது.
இந்தியாவில் இனி அதற்கு பிரச்சனையே இருக்காது.. ரஷ்யா, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியாவை எதிர்நோக்கும் அரசு!
ஐஐஐடி அலகாபாத்
இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி) அலகாபாத் கல்லூரியை சேர்ந்த மாணவர் அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் கூகுள் நிறுவனத்திடமிருந்து சுமார் 1.4 கோடி ரூபாய் வருடாந்திர சம்பளத்தில் வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
1.4 கோடி ரூபாய் சம்பளம்
ஐஐஐடி அலகாபாத் கல்லூரியில் எம்.டெக் பட்ட படிப்பை சேர்ந்த பிரதம் பிரகாஷ் குப்தா மாதத்திற்குச் சுமார் 11.6 லட்சம் ரூபாய் வீதம், வருடத்திற்குச் சுமார் 1.4 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தில் வேலையை வாங்கியுள்ளார்.
100% வேலைவாய்ப்பு
ஐஐஐடி அலகாபாத் கல்லூரியை சேர்ந்த பல மாணவர்களும் சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். ஐஐஐடி அலகாபாத் கல்லூரியின் எம்.டெக் 2022 பேட்ச்-ஐ சேர்ந்த அனைவரும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
லண்டன் அலுவலகம்
பிரதம் பிரகாஷ் குப்தா கூகுள் நிறுவனத்தின் லண்டன் அலுவலகத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த அறிவிப்பை பிரதம் பிரகாஷ் குப்தா தனது லின்கிடுஇன் கணக்கில் பதிவிட்டு உள்ளார். இந்தப் பதிவில் இந்த வருடம் பல முன்னணி நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பை பெற்றதில் கூகுளில் சேர முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோடி ரூபாய் சம்பளம்
ஐஐஐடி அலகாபாத் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த ஆண்டு ஐஐஐடி அலகாபாத் எம்.டெக் பிரிவை சேர்ந்த 5 மாணவர்கள் கோடி ரூபாய் மதிப்பிலான பேக்கேஜ்களைப் பெற்றுள்ளனர்.
அமேசான், பேஸ்புக், கூகுள், ஆப்பிள், நெட்பிளிக்ஸ்
இந்த மாணவர்கள் அமேசான், பேஸ்புக், கூகுள், ஆப்பிள், நெட்பிளிக்ஸ் போன்ற சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து சலுகைகளைப் பெற்றுள்ளனர். இதில் கூகுளின் 1.4 கோடி பேக்கேஜ் எல்லாவற்றிலும் மிக உயர்ந்தது.
அமேசான் மற்றும் ரூப்ரிக்
கூகுள்-ஐ தொடர்ந்து அமேசான் மற்றும் ரூப்ரிக் நிறுவனத்திடம் இருந்து அனுராக் மகடே மற்றும் அகில் சிங் ஆகியோர் 1.25 கோடி ரூபாய் மற்றும் 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வாய்ப்பை பெற்றுள்ளார்.
பி.டெக் மாணவர்கள்
மேலும் ஐஐஐடி அலகாபாத் கல்லூரியை சேர்ந்த 48 சதவீத பி.டெக் மாணவர்கள் பேஸ்புக், ஆப்பிள், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து அதிகப்படியான சம்பளத்தில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IIIT Allahabad Pratham Prakash Gupta got job at Google with Rs 1.4 crore salary
IIIT Allahabad Pratham Prakash Gupta got job at Google with Rs 1.4 crore salary ரூ.1.4 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. அசத்தும் ஐஐஐடி மாணவர்..!