கடந்த ஒரு வருடமாக காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்களும், முக்கிய தலைவர்களும் விலகி வரும் நிலையில், கர்நாடக மாநிலத்தில் 25 ஆண்டு காலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா திடீரென அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
கடந்த ஓரு மாதத்தில் மட்டும், காங்கிரஸின் மூத்த தலைவரும், ஜி-23 தலைவர்களில் ஒருவருமான கபில் சிபல், குஜராத் ஹர்திக் பட்டேல் விலகி அதிர்ச்சி கொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக, கர்நாடக மாநிலத்தில் சுமார் 25 ஆண்டுகள் மாநில காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துவந்த மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா திடீரென அக்கட்சியிலிருந்து விலகி உள்ளார்.
1997-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரிஜேஷ் கலப்பா காங்கிரசின் தற்காலிக தலைவர் சோனியா காந்திக்கு எழுதியிருக்கும் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது,
“நம் கட்சியின் நலனுக்காகத் தொடர்ந்து உழைக்க வேண்டும். ஆனால், என்னுடைய அந்த ஆர்வத்தைக் கட்சி வழங்கவில்லை. எனவே, நான் கட்சியில் இருந்து விலகுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வெளியான ஒரு பரபரப்பு தகவலின்படி பிரிஜேஷ் கலப்பா ஆம் ஆத்மியில் சேரப்போவதாகத் தெரிகிறது. இதனை அம்மாநில தனியார் செய்தி ஊடகம் ஒன்றும் செய்தியாக வெளியிட்டுள்ளது.