‘விக்ரம்’ படத்தின் இரண்டு மாஸ் அப்டேட் – லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் இரண்டு அப்டேட்டுகளை பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு உலக நாயகன் கமல் நடித்துள்ளப் படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் வந்துள்ள இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள், இதுவரை அவர் நடித்த படங்களுக்கு இல்லாத வகையில் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம் ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

நாளுக்குள் நாள் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. நடிகர் விஜய்சேதுபதி இந்தப் படத்தில் சந்தானம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழுவினர் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். ஆனால் அவரின் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சூர்யா இடம்பெற்றிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் போஸ்டர் ஒன்றைப் பகிர இணையத்தில் வைரலாகி வருகிறது.

image

மேலும், ‘விக்ரம்’ படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று இறுதியாக சவுண்ட் மிக்ஸிங் நடைபெற்று வந்தது. தற்போது அதுவும் முழுமை பெற்று விட்டதாக லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். லோகேஷ் கனராஜ் மற்றும் அனிருத் கைகோர்த்து நிற்கும் புகைப்படம் ஒன்றையும் அதனுடன் பகிர்ந்துள்ளார்.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.