தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தமிழ் பாரம்பரிய முறைப்படி வெயிலை சமாளிக்க மோர் அருந்துவதற்கு பதிலாக, பீர் அருந்தி அவலமான ஒரு சாதனையை தமிழர்கள் செய்து உள்ளனர்.
கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 28ஆம் தேதி முடிந்துவிட்டது. இருப்பினும் கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறது.
இந்த கோடை வெயிலை சமாளிப்பதற்காக வழக்கமாக தமிழர்கள் பாரம்பரியப்படி மோர் அருந்துவது வழக்கம், ஆனால் தமிழக அரசின் மது கடைகளில் தற்போது பீர் அருந்தி இந்த கோடை வெயிலை தமிழர்கள் சமாளித்து இருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 5380 டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் சுமார் 85 கோடி ரூபாய் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் பீர் மட்டும் 25 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அண்மைக்காலமாக கோடைகாலத்தில் பீர் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெயிலின் தாக்கம் காரணமாக பீர் விற்பனை வழக்கத்தை விட 40 சதவீதம் அதிகரித்திருந்தது.
வெயிலின் தாக்கம் காரணமாக மோர் குடிப்பதற்கு பதிலாக பீர் குடித்து குடிமகன்கள் வெயிலை சமாளிக்க வந்துள்ளது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கோடை வெயிலை சமாளிக்க இந்த கோடை சீசனில் பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், குளிரூட்டப்பட்ட பீர்களையே வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கியதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் வரும் காலங்களில் வெயில் அதிகம் ஆனால் இந்த பீர் விற்பனை அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.