வெளிநாட்டில் முன்னாள் கட்டார் இளவரசி மர்ம மரணம்


கட்டார் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் ஒருவரின் முன்னாள் மனைவி ஸ்பெயின் நாட்டில் உள்ள தமது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தெற்கு ஸ்பெயினில் உள்ள மார்பெல்லா பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில், 45 வயதான காசியா கல்லனியோ அதிக போதை மருந்து காரணமாக இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் போலந்து வம்சாவளியை சேர்ந்த காசியா கல்லனியோ, கட்டார் அரச குடும்பத்து Abdelaziz bin Khalifa Al-Thani என்பவரின் மூன்றாவது மனைவி ஆவார்.

தமது மூன்று மகள்களை தனது கட்டுப்பாட்டில் விடுவிக்க கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக கல்லனியோ போராடி வந்துள்ளார்.
சொந்த மகளையே Khalifa Al-Thani துஸ்பிரயோகம் செய்ததாக கல்லனியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

Khalifa Al-Thani-ன் தந்தை கட்டார் நாட்டை 23 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். எண்ணெய் மற்றும் நிதியமைச்சராக பொறுப்பு வகித்து வந்த Khalifa Al-Thani 1995ல் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து என்ற நிலையில் நாட்டைவிட்டு வெளியேறினார்.

வெளிநாட்டில் முன்னாள் கட்டார் இளவரசி மர்ம மரணம்

கட்டார் அமைச்சராக இருந்த வேளையில், பாரிஸ் நகரில் வைத்து கல்லனியோவை Khalifa Al-Thani சந்தித்துள்ளார்.
இருவரும் 2004ல் திருமணம் செய்துகொள்ள, இரட்டை மகள்களுக்கு(17) பெற்றோராகினர்.

தொடர்ந்து மூன்றாவது ஒரு மகள்(15) பிறக்க, இந்த தம்பதி 2012ல் விவாகரத்து பெற்றுள்ளது.
இந்த நிலையில் கல்லனியோ ஸ்பெயின் நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.

ஆனால் மதுவுக்கு அடிமையான கல்லனியோ 2018ல் தமது மூன்று பிள்ளைகளின் பொறுப்பையும் இழந்தார்.
இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் கல்லனியோவிம் மூன்று மகள்களில் ஒருவர் தந்தைக்கு எதிராக அளித்த புகாரில்,

தம்மை கட்டாயப்படுத்தி அவரது படுக்கையில் படுக்க வைப்பதாகவும், தவறாக நடந்து கொண்டதாகவும், 15 வயது வரை சுமார் 7 ஆண்டுகள் இது தொடர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Khalifa Al-Thani குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தாலும், பொலிஸ் விசாரனையில் நடந்தவை உண்மை என உறுதியானது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.