கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து பல நிறுவனங்களின் பங்கு விலையானது, ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாகவே நல்ல நிறுவன பங்குகளின் விலை கூட, பலத்த சரிவினைக் கண்டு வந்தன . இந்த நிலையில் இது முதலீட்டாளர்களுக்கு குறைந்த விலையில் பங்குகளை வாங்க நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டது.
அந்தவகையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா போர்ட்போலியோவில் டாடா குழும பங்கினை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
ஐபிஓவில் முதலீடு செய்ய போகிறீர்களா? 5 புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

1 வாரத்தில் ரூ.720 கோடி
இன்று நாம் பார்க்கவிருக்கும் பங்கு டைட்டன் ஆகும். இந்த பங்கின் விலையானது கடந்த 5 அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இது 2134 ரூபாய் என்ற லெவலில் இருந்து, 2295 ரூபாய் என்ற லெவலுக்கு ஏற்றம் கண்டுள்ளது. இது இந்த பிக் முதலீட்டாளருக்கு 720 கோடி ரூபாய் லாபம் கிடைக்க வழிவகுத்துள்ளது.

டைட்டன் விலை வரலாறு
இப்பங்கின் விலை கடந்த ஐந்து அமர்வுகளில் 2134.30 ரூபாயில் இருந்து, 2295 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இது இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் மட்டும் 160.70 ரூபாய் அல்லது 7.50% ஏற்றம் கண்டுள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம்
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் டைட்டன் நிறுவனத்தின் மார்ச் 2022 காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் 3,53,10,395 பங்குகள் அல்லது 3.98% பங்குகள் இருந்தது.
இதே ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் 95,40,575 பங்குகள் அல்லது 1.07% பங்குகள் இருந்தது. ஆக மொத்தம் இந்த தம்பதியரிடம் 4,48,50,970 பங்குகள் இருந்தன.

எவ்வளவு நெட்வொர்த் ஏற்றம்?
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் மொத்தம் 4,48,50,970 பங்குகள் உள்ளன. ஒரு பங்குக்கு டைட்டன் நிறுவனம் 160.70 ரூபாய் லாபம் கொடுத்துள்ளது. இதன் மூலம் அவரின் வருவாய் விகிதம் 720 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. (160.70 *4,48,50,970)

இன்று என்ன நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 2223.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 2304.90 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2201 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது சற்று அதிகரித்து, 2222.90 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2304.60 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2201 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 2767.55 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1564.60 ரூபாயாகவும் உள்ளது.
Rakessh jhunjhunwala earns Rs.720 crore from this Tata group stock in 5 days
The price of Titan stock has been steadily rising for the last 5 sessions. With this, the Big Investor got a profit of Rs 720 crore.