60% ஊழியர்கள் பணிநீக்கம்.. திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் தளமான Yaari, கடந்த 30 நாட்களில் அதன் மொத்த பணியாளர்களில் 60 சதவீதம் அதாவது சுமார் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

இந்தியாபுல்ஸின் மற்றொரு நிறுவனமான Dhani Services உடன் இணைவதற்குத் தயாராகி வரும் நிலையில் இந்தப் பணிநீக்கம் ஸ்டார்ட்அப் துறையைத் தாண்டி நிதி சேவைத் துறையில் இருப்போரைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

245 பேர் பணிநீக்கம்.. MPL, ப்ரென்ட்ரோ அறிவிப்பால் ஸ்டார்ட்அப் ஊழியர்கள் அதிர்ச்சி..!

 150 ஊழியர்கள் பணிநீக்கம்

150 ஊழியர்கள் பணிநீக்கம்

யாரி நிறுவனத்தை வர்த்தக நடவடிக்கைகளை மூடுவதற்கு நிர்வாகம் ஒரே இரவில் 150 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்தது, மீதமுள்ள ஊழியர்களைத் தானி நிறுவனத்திற்கு மாற்றியுள்ளதாக இந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்டார்ட்அப்

ஸ்டார்ட்அப்

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் பட்டியலில் தற்போது இந்தியாபுல்ஸ் நிறுவனத்தின் இ-காமர்ஸ் தளமான Yaari இணைகிறது. இதுவரை 2022 ஆம் ஆண்டில், ஸ்டார்ட்அப்கள் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி 10000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன.

மும்பை பங்குச்சந்தை
 

மும்பை பங்குச்சந்தை

யாரி டிஜிட்டல் சர்வீசஸ் நடத்தும் யாரி நிறுவனம், இந்தியாபுல்ஸ்-இன் துணை நிறுவனமாகும், மேலும் யாரி பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளது. மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முடியும் போது 2.64 சதவீதம் சரிந்து ரூ.35.05 ஆக முடிந்தது.

ப்ரென்ட்ரோ, எம்பிஎல்

ப்ரென்ட்ரோ, எம்பிஎல்

லேர்னிங் மற்றும் கம்யூனிட்டி பிளாட்பார்ம் ஆன ப்ரென்ட்ரோ (Frontrow) சுமார் 145 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது இந்நிறுவன மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 30 சதவீதமாகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான மொபைல் ப்ரீமியம் லீக் (MPL) நிறுவனம் சுமார் 100 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது மொத்த ஊழியர்கள் அளவில் 10 சதவீதமாகும்.

 Mfine பணிநீக்கம்

Mfine பணிநீக்கம்

பெங்களூரைச் சேர்ந்த டிஜிட்டல் ஹெல்த்கேர் சேவை நிறுவனமான Mfine மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து அதிர்ச்சி அளித்துள்ளது.

 பணிநீக்கம் செய்த நிறுவனங்கள்

பணிநீக்கம் செய்த நிறுவனங்கள்

கார்ஸ்24 – 600 ஊழியர்கள்
வேதாந்து – 424 ஊழியர்கள்
Unacademy குரூப் – 1000 ஊழியர்கள்
ட்ரெல் – 300 ஊழியர்கள்
லிடோ – 200 ஊழியர்கள்
furlenco – 180 ஊழியர்கள்
மீஷோ – 150 ஊழியர்கள்
ஓகேகிரெடிட் – 40 ஊழியர்கள்
Whitehat Jr- 1000 ஊழியர்கள்
பிளிங்க்இட் – 1600 ஊழியர்கள்
பெட்டர்.காம் (இந்தியா) – 3000 ஊழியர்கள்
ஓலா – 2100 ஊழியர்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Indiabulls owned Yaari layoff 150 employees

Indiabulls owned Yaari layoff 150 employees 60% ஊழியர்கள் பணிநீக்கம்.. திடீர் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

Story first published: Wednesday, June 1, 2022, 22:50 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.