தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு அடைந்துள்ளது. இந்த 6 இடங்களுக்கான தேர்தலில் 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அரசியல் கட்சி சார்பாக ஆறு பேரும், சுயேச்சையாக 7 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில், கட்சி சார்பாக அதிமுகவை பொறுத்தவரை இரண்டு வேட்பாளர்களும், திமுக சார்பில் மூன்று வேட்பாளர்களும், காங்கிரஸ் சார்பில் ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு முன்மொழிவதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், அவர்களின் வேட்புமனு நாளை நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பாக போட்டியிட கூடிய 6 பேரின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயத்தில், சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களுக்கு முன்மொழிவதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், அவர்களின் வேட்புமனு நாளை நிராகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், திமுக, அதிமுக, காங்கிரஸ் சார்பாக போட்டியிட கூடிய 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மேலும், இந்த வெற்றி முடிவு வருகின்ற ஜூன் மாதம் மூன்றாம் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.