Log in வேண்டாம்… ஒரே OTP-யில் ரயில் டிக்கெட்: இதை ட்ரை பண்ணுங்க!

IRCTC ticket booking Tamil News: இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) தற்போது அதன் டிஜிட்டல் ஹெல்ப் டெஸ்கான ஆஸ்க் டிஷ்ஷா (Ask DISHA) மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தனிநபர்களை அனுமதிக்கிறது. ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) மூலம் இயங்கும் இந்த சேவை தளத்தை இந்திய ரயில்வே மேம்படுத்தியுள்ளது.

ஆஸ்க் டிஷ்ஷா – Ask DISHA (எப்பொழுதும் உதவி தேட டிஜிட்டல் தொடர்பு) வாடிக்கையாளர்களுக்கு OTP சரிபார்ப்பு லாக்-இன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் மற்றும் பிற சேவைகளுக்கான ஆதரவைப் பெறவும் உதவுகிறது என்றும் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி பயனர்கள் உள்நுழைய வேண்டிய அவசியமில்லை என்றும் இந்தியன் ரயில்வே அதன் சமீபத்திய ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தது.

இந்தியன் ரயில்வே (IRCTC) இணையதளம் மற்றும் அதன் மொபைல் செயலியில் கிடைக்கும் அரட்டை அடிப்படையிலான ஹெல்ப் டெஸ்க், உரை அல்லது குரல் அரட்டை மூலம் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பயனர்களை அனுமதிக்கிறது. ஆஸ்க் டிஷ்ஷா – Ask DISHA இன் மற்ற அம்சங்களில் வாடிக்கையாளர் கேள்விகளுக்குப் பதிலளிப்பது மற்றும் 24×7 வாடிக்கையாளர் ஆதரவு ஆகியவையும் அடங்கும். வினவல் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் இது தானாகவே பரிந்துரைக்கிறது. சாட்போட் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வினவல்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி அக்டோபர் 2018 இல் Ask DISHA ஐ அறிமுகப்படுத்தியது, இது பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் CoRover Pvt உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

ஆஸ்க் டிஷ்ஷா மூலம் டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்வது?

முதலில் IRCTC இணையதளத்தைப் பார்வையிடவும்.

பின்னர், IRCTC இணையதளத்தின் கீழ் வலது மூலையில் ‘Ask DISHA’ ஹெல்ப் டெஸ்க் தோன்றும். இருப்பினும், மெனுவிலிருந்தும் இதை அணுகலாம்

பயனர் டிஜிட்டல் உதவியாளரைத் தேர்ந்தெடுத்ததும், Ask DISHA சாளரம் மேல்தோன்றும். இது PNR நிலை, புக் டிக்கெட்டுகள், பணத்தைத் திரும்பப்பெறும் நிலை மற்றும் போர்டிங்கை மாற்றுதல் உள்ளிட்ட அம்சங்களைப் பட்டியலிடுகிறது.

OTP சரிபார்க்கப்பட்ட உள்நுழைவுக்கு மொபைல் எண்ணை உள்ளிடுமாறு சாட்பாட் பயனரைக் கேட்க்கும்

OTP சரிபார்ப்புக்குப் பிறகு, பயனர்கள் ஹெல்ப் டெஸ்க் சேவைகளை அணுக முடியும்.

பயண டிக்கெட்டை முன்பதிவு செய்ய பயனர்கள் அரட்டை அல்லது குரல் செய்தி மூலம் ஆஸ்க் டிஷ்ஷா-வை அணுகலாம்.

சாட்பாட் பயனர்களுக்கு பயண விருப்பங்களை வழங்குகிறது மற்றும் பயனர்கள் பயண டிக்கெட்டை தேர்வு செய்யவும், பணம் செலுத்தவும் மற்றும் முன்பதிவு செய்யவும் அனுமதிக்கிறது.

PNR நிலையைச் சரிபார்த்தல், பணத்தைத் திரும்பப்பெறக் கோருதல், பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலையைச் சரிபார்த்தல், முன்பதிவு வரலாறு, மின்-டிக்கெட்டை அணுகுதல் மற்றும் மின்னணு முன்பதிவு சீட்டு (ERS) ஆகியவற்றைப் பதிவிறக்குதல் போன்றவைகளும் Ask DISHA வழங்கும் பிற சேவைகளில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.