இம்மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுற்றுலா அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடருக்கான இலங்கை அணியை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போட்டிகள் எதிர்வரும் ஜூன் 07, 08, 11ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதோடு, முதல் இரு போட்டிகள் கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்திலும், மற்றைய போட்டி கண்டி, பல்லேகலை மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஜூன் 14 – 24 வரை 5 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் இடம்பெறவுள்ளது.
அதன் பின்னர் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர், ஜூன் 29 – ஜூலை 08 வரை இடம்பெறவுள்ளது.
தசுன் ஷானக தலைமையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 18 பேர் கொண்ட ரி20 அணி வருமாறு – தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, நுவனிந்து பெர்னாண்டோ, லஹிரு மதுஷங்க, வனிந்து ஹசரங்க, சாமிக கருணாரத்ன, துஷ்மந்த சமீர, கசுன் ராஜித, நுவன் துஷார, மனிஷ பத்திரன, ரமேஷ் மெண்டிஸ் , மகேஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, லக்ஷன் சந்தகன்.
மேலதிக வீரர்கள் – ஜெஃப்ரி வெண்டர்சே, நிரோஷன் டிக்வெல்ல.