“From a pariah to a ViswaGuru
From Dark to லைட்”
8 ஆண்டுகள் எங்கள் முதல் ஊழியராக நரேந்திர மோடியை எண்ணுகிறோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு டிவிட் போட. அதற்க்கு விசிக வன்னியரசு சாதியை அசிங்கப்படுத்திவிட்டார், அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பதில் டிவிட் ஒன்றை பதிவு செய்தார்.
அதில், “எச்சரிக்கை பாப்பானுக்கே மூப்பான் பறையன், கேப்பாரில்லாமல் கீழ் சாதியானான் என்பது முதுமொழி. சனாதனத்தை- வர்ணாசிரமத்தை ஏற்காத பறையர் குடியை ஒதுக்கி வைத்ததே இந்துத்துவம் தான். அப்படிப்பட்ட மூத்த பறையர்குடியை இழிவுபடுத்தும் சாதிய மனநோயாளி அண்ணாமலை மன்னிப்பு கேட்கவேண்டும்” என்று வன்னியரசு தெரிவித்து இருந்தார்.
இதற்க்கு அண்ணாமலை இரு தினங்களுக்குமுன், “அண்ணா வணக்கம்! கத்தியை விட நம் புத்தி கூர்மை என்று சொல்லுவார்கள். உங்களுக்காக ஒரு ஆங்கில – தமிழ் அகராதி வாங்கி அனுப்புகிறேன், நான் பதிவிட்ட வார்த்தையின் அர்த்தத்தை பார்க்கவும். வாழ்க வளமுடன்” என்று pariah வுக்கு விளக்கமளித்தார்.
மேலும் இன்று அண்ணாமலை pariah குறித்து மேலும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில், “பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கை சகோதர சகோதரிகள் நான் ஒரு பதிவில் பயன்படுத்திய ‘pariah’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருந்தார்கள்!
The word Pariah is not the same as Paraiar. The latter denotes the highly respected Siva Sambava Hindu community. I am fully aware that the name ‘Yanaiyerum Perum Paraiar’ is the title Hindu Sanatana Dharma gave to this great community which has civilizational & foundational contribution to Bharat that is India So to think that I have used the term ‘Pariah’ to demean the community is wrong & mischievous
நான் ‘Pariah’ எனும் பதத்தை பயன்படுத்தினேனே அன்றி Pariar எனும் பதத்தை அன்று. பின்னது ஹிந்து சமுதாயத்தின் மிகவும் மதிக்கப்படும் அங்கமான சிவ சாம்பவ சமுதாயத்தைக் குறிக்கும் என்பதை அறிவேன். அவர்கள் ஆனையேறும் பெரும் பறையர் என்றே ஹிந்து சனாதன சமயத்தில் அழைக்கப்படுகிறார்கள்
இதை அறிந்த நான் Pariah என்பதை சமூக இழுக்காக பயன்படுத்தினேன் என சொல்வது விஷமத்தனமானது உள்நோக்கம் கொண்டது. சத்யமேவ ஜெயதே” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.