நல்ல இசையை ரசிக்க மொழி, மதம், நாடு, இனம் எதுவும் கிடையாது. அப்படியாக உலகிலுள்ள அனைத்து நல்ல இசைகளையும் அனைத்து மக்களுமே விரும்பி கேட்பது வழக்கம்.
அந்த இசை கலைஞர்களை கொண்டாடி தேர்ப்பதிலும் மக்களுக்கு அவ்வளவு ஆனந்தம். அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசை உலகம் முழுவதும் பல்வேறு தரப்பு மக்களாலும், ரசிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று அவர் ஐந்தாவது பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அவரின் ரசிகர்கள் உட்பட அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது வாழ்த்தினை இளையராஜாவுக்கு போன் மூலம் அழைத்து இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேபோல் திரைப் பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.