இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி ஏலம் மீண்டும் தாமதமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அதிவேக இன்டர்நெட் இந்தியாவில் தற்போது அவசியம் என்ற நிலையில் இந்தியர்கள் 5ஜி தொழில்நுட்பத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இருந்து 5ஜி தொழில்நுட்பம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 5ஜி ஏலம் மீண்டும் தாமதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 5ஜி எப்போது.. பட்ஜெட்டில் சூப்பர் அப்டேட்..!
5ஜி ஏலம்
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் ஜூன் மாதம் 5ஜி ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 5ஜி ஏலம் தற்போது மீண்டும் தாமதமாகும் என தொலைத்தொடர்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாமதம்
டெலிகாம் சேவை வழங்கும் நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை தனியார் நெட்வொர்க்குகளை பயன்படுத்த விருப்பம் தெரிவிப்பதால் தான் 5ஜி ஏலம் தாமதம் ஆகி வருவதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை
5ஜி வெளியீட்டுக்கான டிராய் திட்டங்களுக்கு இன்னும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின்னரே 5ஜி ஏலத்திற்கான விண்ணப்பங்களை கோரும் அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது. இதனால் 5ஜி ஏலம் குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு மாதம் ஆகும் என்றும் கூறப்படுகிறது.
விரைவில்
இதன் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி 5ஜி ஏலம் ஜூனில் நடைபெறுவது சந்தேகம் என்றாலும் விரைவில் 5ஜி ஏலம் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தொலைத்தொடர்பு வட்டாரங்கள் கூறுகின்றன. அமேசான், சிஸ்கோ, பேஸ்புக், கூகுள், இண்டெல், அதானி, ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்கள் பிராட்பேண்ட் இந்தியா ஃபோரம் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்த அமைப்பின் சார்பில் தான் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் நடைபெற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
6ஜி
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டு 6ஜி நெட்வொர்க்குகள் இந்தியாவில் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலமே இன்னும் நடைபெறாத நிலையில் 6ஜி தொழில்நுட்பம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
5G spectrum auctions in India may get delayed once again
5G spectrum auctions in India may get delayed once again | இந்தியாவில் மீண்டும் தாமதம் ஆகிறது 5ஜி ஏலம்: என்ன காரணம் தெரியுமா?