இந்திய விடுதலைப் போராளி அஞ்சலை பொன்னுசாமி மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அஞ்சலை பொன்னுசாமியின் மறைவு வேதனை அளிப்பதாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய இராணுவத்தில் ஜான்சி ராணி படைப்பிரிவில் இணைந்து இந்திய விடுதலைக்காகப் போராடிய வீரமங்கையான அஞ்சலை பொன்னுசாமி அம்மாளின் தியாகம், இந்திய விடுதலை வரலாற்றில் என்றும் அழியாப்புகழ் பெற்று விளங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.