இலங்கை அரசு வரி உயர்வு.. அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு.. ஆடம்பர பொருட்களுக்கு செக்..!

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு பல முக்கிய நிர்வாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் குறிப்பாக உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு குறைப்பு, பொருளாதார மேம்பாடுகள் நடவடிக்கைகள் ஆகியவற்றை முக்கியமானதாகக் கொண்டு இயங்கி வருகிறது இப்புதிய அரசு.

இந்நிலையில் இலங்கை அரசு தற்போது பல முக்கியப் பொருட்கள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.

அன்னிய செலாவணி இருப்பு

இலங்கையில் அன்னிய செலாவணி இருப்பின் அளவை மேம்படுத்தவும், தொடர்ந்து குறைவதைத் தடுக்கவும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தடை விதிப்பும், அதிகப்படியான விரி விதிப்பையும் விதிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

 ரணில் விக்கிரமசிங்கே

ரணில் விக்கிரமசிங்கே

ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் வைன், சீஸ் உட்பட 369 பொருட்களின் இறக்குமதி உரிமத்தை ரத்து செய்தது மட்டும் அல்லாமல் அதிகப்படியான வரி விதிப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு குறையும், அன்னிய செலாவணி இருப்பைக் காப்பாற்ற முடியும்.

 இறக்குமதி தடை
 

இறக்குமதி தடை

இந்த இறக்குமதி தடையில் இலங்கை அரசு முக்கியமாகக் குறிவைத்துள்ளது ஆடம்பர பொருட்களைத் தான், இந்த ஆடம்பர பொருட்களைப் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணிகளைக் கவர்வதற்காக ஹோட்டல்கள் இறக்குமதி செய்யும். தற்போது இந்த அதிகப்படியான வரி விதிப்பு என்பது சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்தரச் சேவையை அளிக்க முடியாமல் போகலாம்.

வரி விதிப்பு

வரி விதிப்பு

ஜூன் 1ஆம் த்தி முதல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீஸ், யோகர்ட் ஒரு கிலோ 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் இறக்குமதி சாக்லேட் மீதான வரி 200 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் பழம், மதுபானம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான வரி இரட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

 வரி விதிப்பு

வரி விதிப்பு

மார்ச் 2020ல் இலங்கை அரசு பல முக்கியமான பொருட்கள் மீது இறக்குமதி தடை விதிக்கப்பட்டது, ஆனால் கூடுதல் வருமானத்திற்காக அதிகப்படியான வரி விதிப்பு அறிவித்துச் சில முக்குமான பொருட்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு அதிகப்படியான வரியுடன் இறக்குமதியை அனுமதிக்கிறது.

இலங்கை பொருளாதாரச் சரிவு

இலங்கை பொருளாதாரச் சரிவு

இலங்கை பொருளாதாரச் சரிவில் இருந்து மீண்டு வர ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு 3 பில்லியன் டாலர் அளவிலான கடன் பெற்ற IMF உடன் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கைக்கு மிகப்பெரிய நிதி ஆதாரம் கிடைக்கும் அதன் மூலம் பொருளாதாரம், வர்த்தகத்தை மீட்டு எடுக்க முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sri Lanka raise import taxes on wine, cheese to curb imports

Sri Lanka raise import taxes on wine, cheese to curb imports இலங்கை அரசு வரி உயர்வு.. அடுத்தடுத்து அதிரடி அறிவிப்பு.. ஆடம்பர பொருட்களுக்குச் செக்..!

Story first published: Thursday, June 2, 2022, 15:05 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.