இளம்பெண்ணை கடத்த போலீசாக மாறிய பெற்றோர்!| Dinamalar

பெங்களூரு : வீட்டினரின் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்து கணவருடன் வசித்த இளம் பெண்ணை, பெற்றோரே போலீசார் போன்று நடித்து கடத்தி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம், பெங்களூரு புறநகர் நெலமங்களாவின், வீரசாகராவில் வசிக்கும் கங்காதர், 25, ஜலஜா, 21, பரஸ்பரம் காதலித்தனர். இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை பொருட்படுத்தாமல், மே 25ல் இருவரும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, பேட்ரஹள்ளியின் வித்யாநகரில் உள்ள, கங்காதரின் அக்கா வீட்டில் தங்கியிருந்தனர்.நேற்று முன்தினம் இரவு, 20 பேர் கொண்ட கும்பல், ‘பேட்ரஹள்ளி போலீசார்’ என கூறி, அந்த வீட்டில் சோதனையிட்டனர்.
திடீரென வீட்டிலிருந்தவர்களை தாக்கி, புது மணப்பெண் ஜலஜாவை கடத்தி சென்றனர்.ஜலஜாவின் தந்தை தேவராஜ், உறவினர்கள் மகேஷ், சுரேஷ் உட்பட, 20 பேர், ‘போலீஸ்’ எனக் கூறி, தன் மனைவியை கடத்தி சென்றதாக, கங்காதரும், அவரது அக்கா சாக்கம்மாவும், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.