உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகில் உணவு பற்றாக்குறை ஏற்படும் என்றும் இது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும் என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எச்சரித்துள்ளார்.
ஸ்வீடனில் அந்நாட்டு பிரதமர் மக்டலேனா ஆண்டர்சனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யாவின் உரம் மற்றும் உணவு உற்பத்தி மற்றும் உக்ரைனின் உணவு உற்பத்தி மீண்டும் உலக சந்தைகளை அடையும் வரை உணவு நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.