கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த ஊர் மக்கள்… பரிதவிக்கும் குழந்தைகள்

பாட்னா:
பீகார் மாநிலம்  மேற்கு சம்பரன் மாவட்டம் சுகேலாலி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராம். இவரது மனைவி சுசிலா தேவி. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முத்துராம் மும்பையில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வருவதால், பெரும்பாலும் மும்பையிலேயே தங்கியிருப்பார்.
இந்த சூழ்நிலையில், லீலாகாரியா கிராமத்தைச் சேர்ந்த வினோத் ராம் என்ற திருமணமாகாத வாலிபருடன் சுசிலா தேவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த 6 மாதங்களாக கள்ளத்தொடர்பில் ஈடுபட்டு வந்த இவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவில் ஊர் மக்களிடம் கையும் களவுமாக சிக்கி உள்ளனர்.
சுசிலா தேவியின் வீட்டுக்குள் வினோத் ராம் நுழைந்தபின்னர், அவர்கள் இருவரும் வீட்டின் கதவை மூடிக்கொண்டு உள்ளே இருந்திருக்கிறார்கள். வெகு நேரமாகியும் அவர்கள் கதவை திறக்காத நிலையில், இதை கவனித்த ஊர் மக்கள், இருவரையும் பிடித்து மின் கம்பத்தில் கட்டி வைத்து, விடிய விடிய அடித்து உதைத்துள்ளனர். 
விடிந்ததும் சுசிலா தேவியின் கழுத்தில் வினோத் ராமை தாலி கட்ட வைத்துள்ளனர். வினோத் ராம் குடும்பத்தினர் முன்னிலையில், இந்த திருமணம் நடந்துள்ளது. அதன்பின்னர் இருவரையும் ஊரை விட்டு வெளியேற்றினர். 
கள்ளக்காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுசீலா தேவி தனது கள்ளக்காதலனுடன் சென்றதால் அவரது குழந்தைகள் நிர்கதியாக தவிக்கின்றனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.