காலையில் வெறும் வயிற்றில் நெல்லி ஜூஸ்… இவ்வளவு நன்மை இருக்கு!

Tamil Health Amla Juice Benefits : உடலில் நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு சத்தான உணவு பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். குறிப்பாக இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை கொடுக்கிறது. அந்த வகையில் சிறந்த ஊட்டச்சத்து வழங்குவதில் நெல்லிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு.

வைட்டமின்கள் மற்றும் மினரல்ஸ் உள்ளடங்கியுள்ள நெல்லிக்காய் பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். சளி இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்க நெல்லிக்காய் பெரிதும் உதவுகிறது. செரியமான பிரச்சினை, சருமம ஆரோக்கியம், முடி வளர்ச்சி, கண்பார்வை உள்ளிட்ட பல பயன்களை கொடுக்க வல்லது நல்லிக்காய்

சற்று கசப்புத்தன்மையுடன் புளிப்பு சுவை உடைய நெல்லிக்காய் ஜூஸ் செய்து காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் நெல்லிக்காய் ஜூஸை எடுத்துக்கொள்ளலாம். மேலும் செரிமான அமைப்பை வலுப்படுத்தவும், உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆன்டி ஆக்ஸிடக்ட்ஸ்களை கொண்டுள்ளது.

நெல்லிக்காய் சாற்றில், ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்மின்கள் அதிகம் உள்ளதால் உடலில் கொழுப்பு சேராமல் ஆற்றலை அதிகரிக்கவும், உடல் கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. மேலும் வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கவும், அதிக சிறுநீர் உற்பத்திக்கும் உதவுகிறது. சிறுநீரக கற்களை அகற்றவும், சிறுநீர் தொற்றுக்களை குறைக்கவும் உதவுகிறது.

கண்பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. கண்பார்வை திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கண்புரை எரிச்சல், ட்ரை ஐஸ் உள்ளிட்ட பல பிரச்சினைகளை போக்க வல்லது. காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ குடிக்கும்போது நாள் முழுவதும் உடல் ஆற்றலுடன் இருக்கும்.

வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நெல்லிக்காய் உடலில் நொய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகக் உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ளதைபோல் எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளதால்,உடலில் பாக்டீரியா வைரஸ் தொற்றுக்ளுக்கு  சிகிச்சை அளிக்கவு், உடலை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.