தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்றும் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி அறிவித்துள்ளார்.
வளப்பற்றாக்குறை
தற்போதுள்ள வளப்பற்றாக்குறையில் அரச செலவினங்களைக் குறைப்பதற்காகவும் அரச நிறுவனங்களின் ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்காகவும் வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனவே வெள்ளிக்கிழமையன்று மக்கள் அரச அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.