கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வன்முறைச் சம்பவம்
கடந்த ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பிரபலம்
கைது செய்யப்பட்ட மகிந்த கஹந்தகமகே கடந்த ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆடை களையப்பட்டு, உயிரிழந்தவர் போன்று காட்சிகளை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். பல்வேறு மீம் கிரியேற்றர்களும் இவரின் புகைப்படங்களை பல கோணங்களில் நகைச்சுவையாக்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.