க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவியொருவரை பரீட்சை நிலையமொன்றில் வைத்து துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த ஆசிரியர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் ஹிதோகம களுவிலசேன பரீட்சை நிலையத்தில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த பரீட்சை நிலையத்தின் தலைமை ஆசிரியரும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.