சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டை சாலையில் அருண் ராமலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை கண்ட அவர் உடனடியாக சக்கர வாகனத்திலிருந்து இறங்கி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். அதற்குள்ளாகவே இருசக்கர வாகனம் முழுமையாக எரிந்து நாசமானது. இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காயம் ஏற்பட்டது இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.